How to Create a Post in WordPress
WordPress தளத்தில் ஒரு New Post உருவாக்குவது எப்படி என்பதை நாம் அறிந்துகொள்ளலாம். Post பக்கத்தில் கிளிக் செய்து ஒரு Post ஒன்றினைத் திறந்துகொள்ளலாம். Post Vs Page ஆகிய இரண்டிற்குமான வேறுபாடுகளை நாம் இதற்கு முன்னதான பதிவில் கண்டோம்.
Post பகுதியில் உள்ளவற்றை நாம் அன்றாடம் பதிவேற்றும் நிகழ்வுகளாக கொள்ளலாம். அல்லது Blog வகை என்று சொல்லப்படும் செய்திகளை உள்ளடக்கியதாக உருவாக்கலாம்.
Post Categories
Post பகுதியில் நாம் பதிவேற்றம் செய்யவேண்டியவற்றை பகுப்பு செய்யலாம். அதனை Categories என்று சொல்வர்.
மேலும் நீங்கள் எந்த பகுப்பில் அதனை அமைக்க விரும்புகிறீர்களோ அதனை தெரிவு செய்யலாம் அல்லது புதியதாக சேர்க்கலாம்.
Tags
நீங்கள் அமைக்கவிருக்கும் Post எத்தகைய கருத்துக்களை உள்ளடக்கியவை என்பதை முடிவுசெய்து அதனை எவ்வாறு Google ல் எவ்வாறு தேடுவார்கள் என்பதற்கான கீவேர்டுகள் (Keywords) அமைத்துக்கொள்ளலாம்.
Featured Image
WordPress ல் நீங்கள் முதலில் தெரியவேண்டிய முகப்பு படத்தினைத் தேர்வு செய்து கொள்ள இந்த வசதியினை வழங்குகிறது. கீழே உள்ள படத்தில் காட்டியுள்ளதுபடி உங்களது முகப்பு பக்க படத்தினைத் தெரிவு செய்து பயன்படுத்தலாம்.
மேலும் WordPress ல் கொடுக்ப்பட்டுள்ள சில முக்கியமானவற்றை கீழே பட்டியலில் காணலாம்.
Impotent Sections in WordPress Post
- Publish
- Categories
- Tags
- Featured Image
இவை தவிர்த்து நீங்கள் பயன்படுத்தும் WordPress Theme வகைகளுக்கு ஏற்பட சில சிறப்பான Widget களை கொடுத்திருப்பார்கள் அதனையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
மேலும் SEO செய்வதற்காக சில Plugin களை நாம் இன்ஸ்டால் செய்திருந்தால் அதற்கு தகுந்தாற்போன்ற சிலவற்றை நாம் முறைபடுத்தி ஒரு முறையான WordPress Post யினை உருவாக்கலாம்.
How to Create a Post in WordPress Video Tutorial
வேர்ட்பிரஸ் குறித்த விரிவான வீடியோ டுடோரியல்கள் நமது Valavan Academy YouTube சேனலில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம். நீங்கள் பார்த்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.