How to Install WordPress Tutorial
WordPress பற்றிய அனைத்து விவரங்களையும் இந்த தளத்தில் நீங்கள் காணலாம். WordPress install முதல் Backup வரை அனைத்தும் இங்கே விரிவாக கட்டுரைகளாகவும், வீடியோ டுடோரியல்களாகவும் இருக்கிறது.
ஆனால் நீங்கள் எங்கள் சமீபத்திய கட்டுரைகளை வாசிக்கின்றீர்களாக என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். WordPress நாள்தோறும் ஒரு புதிய அப்டேட் செய்து வருகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
What is WordPress? என்னும் கட்டுரையை நீங்கள் வாசித்தப் பின்னர் What is Domain and Hosting என்பதையும் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறோம்.
இவை இரண்டையும் சரியாக புரிந்துகொண்ட நீங்கள் Hostinger ல் (7% discount code – VALAVAN) ஒரு புதிய டொமைன் மற்றும் ஹோஸ்டிங் வாங்கி இருந்தால் இந்த கட்டுரையில் How to install WordPress என்பதை விளக்குகிறோம்.
Hostinger for Hosting Provider
உங்களுக்குத் தேவையான Domain & Hosting வாங்கிய பின்னர் உங்களின் அக்கவுண்டை லாக்இன் செய்யவும். பெரும்பாலும் Social login வழியாக செல்வதே சிறந்தது. ஏனெனில் நமது இமெயில் பாஸ்வேர்ட் மற்றும் பாதுகாப்பு இதற்கும் இருக்கும். மறந்தும் நாம் இமெயில் பாஸ்வேர்ட் மாற்றினால் இங்கும் தானாகவே ஏற்றுக்கொள்ளும். எனவே நீங்கள் Google login வழியாக செல்வது சிறந்தது.
ஒவ்வொரு முறையும் வெவ்வேறு ஆஃபர்கள் முகப்பு பக்கத்தில் இருக்கும். எனவே நீங்கள் லாக் இன் செய்த பின்னர் கேட்கப்படும் கேள்விகளில் சரியானதை தேர்ந்தெடுக்க கீழுள்ள வீடியோவும் உதவும்.
How to Install WordPress Video Tutorial
உங்களது Dashboard கிடைத்தவுன் கீழே Website என்னும் பகுதியில் உள்ள Auto Installer என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்.
படத்தில் காட்டியுள்ளபடி நீங்கள் Auto installer கிளிக் செய்ததும் கிடைக்க்கூடிய பகுதியில் WordPress என்பதை கிளிக் செய்து கொள்ளலாம். சிறப்பானது எது என்பதை சுட்டிக் காட்டியுள்ளோம்.
WordPress என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்தவுடன் கீழுள்ள பகுதியில் சிலவற்றை காணலாம். அவற்றில் நாங்கள் அம்பு குறியிட்ட பகுதியில் உள்ளதை நிரப்பவும். வேறெதுவும் நிரப்ப வேண்டிய அவசியமில்லை.
மேற்குறிப்பிட்ட பகுதியில் SSl என்பதை நீங்கள் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். Hostinger முறையாக உங்களுக்கு ஒரு SSL Certificate கொடுப்பார்கள். மேலும் அதிகமாக தேவைப்படும் பொழுது நீங்கள் கீழுள்ள Chat Box ல் தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏன் மேலும் SSL தேவைப்படுகிறது என்பதை விளக்கினால் தேவையானவற்றை உங்களுக்கு இலவசமாகவே வழங்குவார்கள். இல்லையெனில் ஒவ்வொரு டொமைனுக்கும் நீங்கள் 850 ரூபாய் செலுத்தி வாங்கலாம்.
WordPress install Complete
வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் முடிந்தபின் உங்களுக்கான வேர்ட்பிரஸ் பகுதி கிடைக்கும். இதற்குப் பின் நீங்கள் நேரடியாக வேர்ட்பிரஸ் பயன்படுத்த முடியும். இதற்கு நீங்கள் yourwebsitename.com/wp-admin என்று கொடுத்து நேரடியாகவும் செய்யலாம்.
முடிவாக
நீங்கள் Hostinger ல் மட்டுமல்ல Bluehost, Sitecountry போன்ற பிற ஹோஸ்டிங் தளத்தில் எவ்வாறு WordPress install செய்வது என்பதை பின்வரும் கட்டுரைகளில் காணலாம்.
WordPress ஐ நீங்கள் உங்கள் கணினியிலும் Localhost வழியாக எவ்வாறு செய்வது என்பதை படித்து இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
மேலும் வீடியோக்கள் பலவும் எங்களது Valavan Academy YouTube சேனலில் உள்ளது பார்த்து உங்களது சந்தேகங்களைப் போக்கிக் கொள்ளலாம்.