How to install WordPress?

install WordPress
83 / 100

How to install WordPress?

வேர்ட்பிரஸ் வலைதளத்தைப் பொறுத்தவரையில் நாம் சுயமாக ஒரு டொமைன் (Domain) மற்றும் ஹோஸ்டிங் (Hosting) பெற்றுக்கொள்ள வேண்டும். பின்பு நீங்கள் வாங்கிய டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சிபேனலுக்குள் (C Panel) சென்று வேர்ட்பிரஸ் (WordPress) என்னும் பொத்தானை அழுத்தி இன்ஸ்டால் செய்யலாம்.

எவ்வாறு முறையாக வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் செய்வது என்பதை கீழுள்ள வீடியோவின் வழியாக காணலாம்.

WordPress Install Video Tutorial

வேர்ட்பிரஸ் நிறுவுவதற்கான படிநிலைகள்

டொமைன் மற்றும் ஹோஸ்டிங் பெறுவதற்கு நீங்கள் Zola Host ல் பெற்றுக்கொள்ளலாம்.  முறையாக உங்களுக்குத் தேவையான டொமைனை (domain) தெரிவுசெய்து பின்பு ஹோஸ்டிங் (hosting) பேக்கேஜ் தேர்வு செய்துகொள்ளலாம்.

Hosting Package

பின்பு உங்களது பேமெண்ட் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்துக்கொள்ளலாம். எல்லாம் முடித்த பின்பு உங்களது சிபேனல் லாக் இன் செய்து சரியான விவரங்களை பார்த்துக்கொள்ளலாம்.

c panel

முழுவிவரங்களை அறிந்த பின்பு எல்லாம் சரியாக உள்ள நிலையில் (SSL) நீங்கள் வேர்ட்பிரஸ் நிறுவுவதற்கு கீழே சென்று படத்தில் காட்டியுள்ளவாறு உள்ளதை சொடுக்கி இன்ஸ்டால் செய்யலாம்.

WordPress

நீங்கள் வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சரியாக நிரப்பி அதனை நீங்கள் நினைவில் கொள்ள உங்களது பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளலாம்.

சில பிளக்-இன் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • limit login
  • Classic editor

ஆகிய இரண்டும் தேவையானவையே. எனவே இதனை செலக்ட் செய்து விட்டு நீங்கள் கீழே சென்று இன்ஸ்டால் செய்யலாம்.

 WordPress details

இப்பொழுது வேர்ட்பிரஸ் தளம் தயாராக உள்ளது. மேலும் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டியவைகள் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.