What is Domain and Hosting

81 / 100

What is Domain and Hosting

ஒரு வலைதளம் இயங்குவதற்கு இரண்டு முக்கிய காரணிகள் அவசியமாகிறது. அவற்றில் ஒன்று முதன்மையானது பெயர் அதனை Domain என்று குறிப்பிடுவர். இந்த பெயருள்ள டொமைன் ஆன்லைனில் இயங்குவதற்கு ஏற்ற இடமே சர்வர் (Server) என்கின்றனர். அதனைப் பெறுவதற்கு நாம் Hosting பெற வேண்டும். ஆன்லைனில் ஒரு வலைதளம் இயங்க Domain and Hosting அவசியமாகிறது.

Domain & Hosting Registration

Domain Registration

அதிகப்படியாக நாம் அறிந்துள்ள டொமைன்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக amazon.com என்று கொள்வோம். இதில் amazon என்பது டொமைன் ஆகும். இதில் .com, .Net, .in, .org என்று பல்வேறு நிலைகளில் நாம் பயன்படுத்த முடியும்.

இதனை பதிவு செய்து முறையாக பராமரித்து வரும் நிறுவனம் (ICANN) Internet Corporation for Names and Numbers என்பதாகும்.

Web Hosting

வெப் ஹோஸ்டிங் என்பது நமக்காக நாம் பதிவு செய்த டொமைன் வழியாக நாம் இயக்கிக்கொள்ளலாம். இதற்கென தனி ஐபி முகவரியினை நாம் வாங்கு Hosting நிறுவனம் தரும்.

வெப் ஹோஸ்டிங் பல்வேறு நிலைகளில் நமக்குக் கிடைக்கிறது. அவற்றில் பரவலாக Shared Hosting, VPS Hosting, Dedicated Hosting என பல்வேறு வகைகளில் கிடைக்கிறது. குறைந்த அளவு பார்வையாளர்கள் கொண்டுள்ள வலைளத்தில் Shared Hosting பயன்படுத்தலாம். Adsense வழியாக பணம் ஈட்டும் ஆவர்ம் உள்ளவர்கள் முதலில் இந்த ஹோஸ்டிங் பெற்றுக் கொள்ளலாம். பின்னர் தேவைப்படும் பொழுது அதனை வேறு ஹோஸ்டிங் பிளான்களில் மாற்றிக் கொள்ளலாம். பெரும் வணிகமோ அல்லது பல்வேறு பார்வையாளர்களைக் கொண்டுள்ள வலைதளங்கள் பிற Hosting களை கொண்டு இயங்கலாம்.

Where to Buy Domain and Hosting

ஆன்லைனில் எண்ணற்ற வலைதளங்கள் நமக்கு டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சேவைகளை வழங்கி வருகிறது. எடுத்துக்காgட்டாக hostinger என்னும் வலைளத்தில் டொமைன் மற்றும் ஹோஸ்டிங் வாங்கி பயன்படுத்தி வருகிறது.

Provider Examples (Domains)

பயன்கள் (Advantages)

  • நாம் மேற்காணும் ஏதோ ஒரு வலைதளங்களில் நமது domain & hosting ஆகியவற்றை மிகச் சுலபமாக பெறலாம்.
  • அந்த வலைதளங்களில் கொடுக்கப்படும் ஆஃபர்களில் மிக குறைந்த விலையில் நமது வலைதளத்தை ஆன்லைனில் உலவவிடலாம்.
  • மேலும் அதிகப்படியான சர்வீஸ்களை கண்டு நாம் பயப்படத்தேவையில்லை.

Disadvantages

  • பெரும்பாலும் அதிகப்படியான சலுகைகள் என்பது முதல் வருடத்திற்கு மட்டுமே பொருந்தக்கூடியதாக இருக்கும்.
  • ஒரே இடத்தில் domain and hosting பயன்படுத்தி வந்தால் பெரும்பாலும் பிரச்சனைகளை நாம் தவிர்க்க முடியும்.
  • வேறு வேறு இடங்களில் domain மற்றும் hosting பயன்படுத்தினால் சில சர்வீஸ்களை நாம் அடிக்கடி மாற்றவேண்டி வரும்.

WordPress Hosting

தற்போது அதிகமாகப் பயன்படுத்தி வரும் மென்பொருளாக WordPress இருக்கிறது. எனவே பல்வேறு வலைதளங்கள் வேர்ட்பிரஸ் தளத்திற்கெனவே தனியாக Hosting சலுகைகளை வழங்குகிறது. இதனால் இந்த தளம் வேகமாக இயங்க ஏதுவாக அமையும் என்று தெரிவிக்கின்றனர்.

How to Make a WordPress Website in 2020 Step by Step [Tamil]

Can I Move My Website to Another Web Hosting Company Without Changing Domain?

நாம் இதற்கு முன்னதாக ஒரு தளத்தில் நமது வெப் ஹோஸ்டிங் (Web Hosting) பெற்று வரும் நிலையில் அதனை முழுமையாக மாற்றிக் கொள்ள முடியும். இதற்கு பல்வேறு விதமான Plugin கள் WordPress ல் கிடைக்கின்றன.

நமது Valavan Academy YouTube  சேனலில் விரிவான வீடியோ பதிவுகள் பதிவேற்றம் செய்து அதற்கான பதிவுகளை இங்கே தொடர்ச்சியாக விளக்கியுள்ளேன். நன்கு படித்து பின்பு உங்களின் வெப்சைட்டை உருவாக்குங்கள்.