What is WordPress?

What is WordPress?
85 / 100

What is WordPress?

WordPress Logo

வேர்ட்பிரஸ் என்றால் என்ன? (What Is WordPress?) வேர்ட்பிரஸ் என்பது ஒரு வெப்சைட்டை உருவாக்கப் பயன்படும் மென்பொருள் அல்லது வலைப்பதிவை உருவாக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய வலை வெளியீட்டு மென்பொருள்.

2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் தொடர்ச்சியாக இயங்கி இன்று 35% வலைதளப் பயன்பாட்டை தன்னகத்தே வைத்துள்ளது.

ஒரு அழகான வெப்சைட்டை உருவாக்க உங்களுக்கு எளிதான பயன்பாட்டை தருகிறது. நீங்கள் எந்த வித கோடிங் அறிவும் இல்லாமல் வெறுமனே கிடைக்கும் Widget களைப் பயன்படுத்தி இதனைச் செய்ய இயலும்.

வேர்ட்பிரஸ் PHP நிரலை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. MS Office ல் நீங்கள் எவ்வாறு எளிதாக எழுத்துகளையோ அல்லது படங்களை உள்ளிட்டு அழகான வெளியீட்டை தரமுடியுமோ அவ்வாறே இங்கும் நீங்கள் செய்ய முடியும்.

WordPress.org vs WordPress.com

வேர்ட்பிரஸ் ஒரு Open Source ஆகும். எனினும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் WordPress.com என்பது நீங்கள் Google ன் blogger போன்று இலவச பயன்பாட்டையும் கொடுக்கும். மேலும் நீங்கள் பணம் செலுத்தியும் ஒரு வெப்சைட்டை உருவாக்க இயலும்.

WordPress.org ஐப் பயன்படுத்தி நீங்கள் Third Party ஹோஸ்டிங்ல் உங்களது வலைதளத்தை நிறுவ முடியும். அதாவது Hostinger, Bluehost, Sitecountry போன்ற ஹோஸ்டிங் கம்பெனிகள் இதற்கென தனியாக சேவைகளை வழங்குகின்றன.

வேர்ட்பிரஸ் பயன்படுத்த காரணங்கள்

  • வேர்ட்பிரஸ் தளத்தைத் தொடங்க நமக்கு குறைந்த அளவு பயிற்சியே தேவை.
  • வேர்ட்பிரஸ் worlds most popular Software for Web Design.
  • Hosting Provider கள் பலரும் வேர்ட்பிரஸை நிறுவ தேவையான மென்பொருள்களை கொடுக்கின்றனர். எளிதில் நிறுவி உங்களது வெப்சைட்டை இணையத்தில் உலாவ விடலாம்.
  • வேர்ட்பிரஸில் எளிதாக உங்களால் பல்வேறு மாற்றங்களை  (Customizable) செய்துகொள்ள இடமளிக்கிறது.
  • இதற்கென பல்வேறு Theme & Plugin கள் தொடர்ச்சியாக மெருக்கூட்டப்பட்டு கிடைக்கின்றன.
  • உங்களது வெப்சைட்டின் மொத்தமும் (control of your own content) உங்களிடமே இருக்கும். எளிதாக வேறொரு ஹோஸ்டிங் நிறுவனத்திற்கு நீங்கள் மாற்றிக் கொள்ளவும் முடியும்.

Domain & Hosting குறைந்த செலவில் நீங்கள் வாங்குவதற்கான லிங்க் ஏற்கனவே கொடுத்துள்ளேன். மேலும் எவ்வாறு அதில் நீங்கள் வேர்ட்பிரஸ் இன்ஸ்டால்  செய்வது என்பதைப் பற்றியும் விரிவாக விளக்கியுள்ளேன்.

மேலும் நமது YouTube சேனல் வழியாக உங்களுக்கு தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதனையும் நீங்கள் பயன்படுத்தி உங்களது சந்தேகங்களை எளிதில் தீர்த்துக்கொள்ள முடியும்.

இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், மேலும் நீங்கள் வேர்ட்பிரஸ் மூலம் என்ன உருவாக்குகிறீர்கள் என்பதைப் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம்!