WordPress Admin Dashboard
WordPress ல் உள்ள அனைத்து வகையான கட்டுப்பாடுகளையும் உள்ளடக்கிய பகுதியாக Admin Dashboard உள்ளது. இதில் நாம் பயன்படுத்தவிருக்கும் அனைத்தும் வரிசையாக கொடுக்கப்பட்டிருக்கும்.
WordPress Theme மற்றும் Plugin பகுதிகள் இதர சேவைகளை இங்கு நாம் காணலாம்.
நீங்கள் பயன்படுத்தும் WordPress Theme மற்றும் WordPress Plugin ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இது மாறுபடும். கீழே கொடுக்கப்பட்டுள்ள படத்தில் ஒரு புதிய WordPress Dashboard எவ்வாறு இருக்கும் என்பது அறிய முடியும்.
அதில் Post, Media, Page, Comments, Appearance, Plugins என்று தொடர்ச்சியாக இருப்பதை பார்க்கமுடிகிறது. இதில் உள்ள கட்டுபாடுகளைக் கொண்டு நமது WordPress Website யினை அழகாகாக்கும் முயற்சியினை மேற்கொள்ளலாம்.
WordPress Customized Dashboard
நீங்கள் பயன்படுத்தும் Theme களுக்கு ஏற்பவும் அதில் பயன்படுத்தப்படும் Plugin களுக்கு ஏற்படும் கீழே உள்ள படத்தில் மாறுபாடு உள்ளதை அறியமுடியும்.
மேலும் வேர்ட்பிரஸ் தளத்தினைப் பற்றி அறிந்த மேலுள்ள வீடியோ மற்றும் கீழுள்ள லிங்க் உங்களுக்கு உதவும்.
WordPress Admin Dashboard Brief Explaination Video Tutorial
வேர்ட்பிரஸ் குறித்த விரிவான வீடியோ டுடோரியல்கள் நமது Valavan Academy YouTube சேனலில் தொடர்ந்து பதிவேற்றம் செய்து வருகிறோம். நீங்கள் பார்த்து புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.