WordPress Tutorials in Tamil

தமிழில் வேர்ட்பிரஸ் (WordPress) பற்றிய தகவல்களை நீங்கள் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்கள். அதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் இந்த பதிவு உங்களுக்குத் தரும்.

இதில் WordPress எவ்வாறு வேலைசெய்கிறது. அதில் எவ்வாறு நம்முடைய வலைதளத்தை மிக அழகாக உருவாக்குவது என்பதைப் பற்றி தமிழில் பார்க்க இருக்கிறோம்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோக்கள் மற்றும் வழிமுறைகள் உங்களுக்கு WordPress Tutorials களாக கிடைக்கின்றது.

WordPress Tutorials in 2021 Introduction

Difference is between WordPress.com vs WordPress.org என்பதை நீங்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இலவச வலைதளத்தை அதாவது blogger.com போன்று WordPress.com என்று உங்கள் டொமைன் பெயருக்குப் பின்னால் வரும்.

வேர்ட்பிரஸ்.காம் இலவசம் தான். ஆனால் நமக்குத் தேவையான வசதிகளை பெற முடியாது. உதாரணத்திற்கு Theme and Plugin ஆகியவற்றை உபயோகப்படுத்த முடியாது.

எனவே WordPress.org ஐ நாம் பயன்படுத்துகிறோம். இது இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்குத் தேவையான டொமைன் மற்றும் ஹோஸ்டிங் பேக்கேஜ்களை நாம் வாங்கிப் பயன்படுத்த வேண்டும்.

WordPress பற்றிய அறிமுகத்தை மேலுள்ள வீடியோவில் பார்த்திருப்பீர்கள். மேலும் ஒரு Website உருவாக்கத் தேவையான டொமைன் மற்றும் ஹோஸ்டிங் எங்கு வாங்கலாம் என்பதை பார்க்கலாம்.

How to Buy Domain and Hosting in 2021 | Tamil

ஒரு வலைதளத்தை உருவாக்க முதலில் சரியான பெயரைத் தேர்ந்தெடுப்பது நல்லது. மேலும் நீங்கள் டொமைன் மற்றும் ஹோஸ்டிங் வாங்க கீழுள்ள லிங்க் பயன்படுத்தலாம்.

👉 Hosting Link: http://www.hostinger.in/valavan ✍ 7% Coupon code: VALAVAN

மேலுள்ள லிங்க் வழியாக எவ்வாறு வாங்குவது என்பதற்கான வீடியோ டுடோரியோல் கீழே உள்ளது.

நீங்கள் சரியான பெயர் மற்றும் ஹோஸ்டிங் தேர்வு செய்தபின்பு எவ்வாறு WordPress யை இன்ஸ்டால் செய்வது என்பதற்கான வீடியோ கீழுள்ளது.

WordPress Hosting in Hostinger, Zolahost & Goviralhost

மேலே நீங்கள் Hostinger ல் எவ்வாறு ஒரு டொமைனை வாங்குவது என்பதைப் பற்றி பார்த்தீர்கள். அதே போன்ற உங்களுக்கு Zolahost மற்றும் Goviralhost ஆகிய இரண்டு தளங்களிலும் எவ்வாறு வாங்குவது என்பதைப் பற்றி தெரிந்துகொள்ளலாம்.

How to install WordPress?

வேர்ட்பிரஸ் வலைதளத்தைப் பொறுத்தவரையில் நாம் சுயமாக ஒரு டொமைன் (Domain) மற்றும் ஹோஸ்டிங் (Hosting) பெற்றுக்கொள்ள வேண்டும்.

பின்பு நீங்கள் வாங்கிய டொமைன் மற்றும் ஹோஸ்டிங் சிபேனலுக்குள் (C Panel) சென்று வேர்ட்பிரஸ் (WordPress) என்னும் பொத்தானை அழுத்தி இன்ஸ்டால் செய்யலாம்.

வேர்ட்பிரஸ் தளத்தை நீங்கள் எந்த Hosting Provider யிடம் வாங்குகிறீர்களோ அதற்கு தகுந்தாற்போன்று இன்ஸ்டால் செய்யும் முறையும் சற்று மாறுபடும். நாம் மூன்று வகையான ஹோஸ்டிங்குகளைப் பார்ப்போம்.

How to Install WordPress in Hostinger


உங்களுக்குத் தேவையான டொமைன் மற்றும் ஹோஸ்டிங் பிளான் ஆகியவற்றை தெரிவு செய்தபின் உங்களது Hostinger Hpanel வழியாக உள்ளே செல்லாம்.

hostinger hpanel

மேலுள்ள படத்தில் காட்டியுள்ளதுபோல் உங்களது ஆர்டரில் உள்ளது காட்டும். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பிளான்களுக்கு ஏற்ப இதில் நாம் வெப்சைட்களை உருவாக்கிக் கொள்ள முடியும்.

Hosting பகுதியில் உள்ள Manage என்னும் பட்டனை கிளிக் செய்து Dashboard பகுதிக்குச் செல்லலாம். அதில் Website என்னும் பகுதியில் Auto Installer என்னும் பட்டனை கிளிக் செய்து நீங்கள்  WordPress இன்ஸ்டால் செய்யலாம்.

உங்களது பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல் ஆகியவற்றைக் கொடுத்து நீங்கள் தொடங்கலாம்.

hostinger hpanel WordPress installation

உங்களது இன்ஸ்டால் எல்லாம் முடிந்த பிறகு நீங்கள் வலைதளத்தை சென்று பார்த்தால் கீழுள்ள படத்தில் உள்ளதைப் போன்று காண்பிக்கும்.

WordPress First Appereace

மேலும் எவ்வாறு வேர்ட்பிரஸ் பகுதியில் மாற்றங்கள் செய்வது என்பதை கீழே உள்ள பகுதியில் விரிவாகப் பார்க்கலாம்.

WordPress tutorials : Install Zola Host Cpanel

டொமைன் மற்றும் ஹோஸ்டிங் பெறுவதற்கு நீங்கள் Zola Host ல் பெற்றுக்கொள்ளலாம்.  முறையாக உங்களுக்குத் தேவையான டொமைனை (domain) தெரிவுசெய்து பின்பு ஹோஸ்டிங் (hosting) பேக்கேஜ் தேர்வு செய்துகொள்ளலாம்.

Hosting Package

பின்பு உங்களது பேமெண்ட் விவரங்களைக் கொடுத்து பதிவு செய்துக்கொள்ளலாம். எல்லாம் முடித்த பின்பு உங்களது சிபேனல் லாக் இன் செய்து சரியான விவரங்களை பார்த்துக்கொள்ளலாம்.

c panel

முழுவிவரங்களை அறிந்த பின்பு எல்லாம் சரியாக உள்ள நிலையில் (SSL) நீங்கள் வேர்ட்பிரஸ் நிறுவுவதற்கு கீழே சென்று படத்தில் காட்டியுள்ளவாறு உள்ளதை சொடுக்கி இன்ஸ்டால் செய்யலாம்.

wordpress

நீங்கள் வேர்ட்பிரஸ் இன்ஸ்டால் செய்யும் பொழுது கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சரியாக நிரப்பி அதனை நீங்கள் நினைவில் கொள்ள உங்களது பயனாளர் பெயர், கடவுச்சொல் ஆகியவற்றை குறித்து வைத்துக் கொள்ளலாம்.

சில பிளக்-இன் அதில் கொடுக்கப்பட்டிருக்கும் அதனை நீங்கள் விரும்பினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆகிய இரண்டும் தேவையானவையே. எனவே இதனை செலக்ட் செய்து விட்டு நீங்கள் கீழே சென்று இன்ஸ்டால் செய்யலாம்.

wordpress details

இப்பொழுது வேர்ட்பிரஸ் தளம் தயாராக உள்ளது. மேலும் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியவைகள் அடுத்தடுத்த பதிவுகளில் காணலாம்.

WordPress Admin Dashboard

வேர்ட்பிரஸ் தளத்தை தொடங்கியவுடன் நமக்கு காட்சியளிப்பது Admin Dashboard தான். இதில் நமது வலைதளத்தைப் பற்றிய எல்லாத் தகவல்களும் அடங்கியிருக்கும்.  நீங்கள் ஒரு Post அல்லது Page எதை உருவாக்குவதாக இருந்தாலும் இங்கேதான் செய்ய முடியும்.

WordPress Basic Settings

ஒரு வலைதளத்தை நாம் உருவாக்கினால் மட்டும் போதாது. அதனை சரியான முறையில் சில அமைப்புகளை செய்தாக வேண்டும். வெறுமனே Post & Page களை உருவாக்கிவிட்டு வெப்சைட் ஆன்லைனில் யாருக்கும் தெரியாது என்று புலம்பி பயனில்லை.  எனவே முதலில் நமது தளத்தை Login செய்தவுடன்
Settings – General பகுதியில் சரியான தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்கவும்.

ஆகியவை சரியாக உள்ளதாக என்பதை பார்க்கவும்.  மேலதிக தகவலுக்கு கீழுள்ள வீடியோவைப் பார்க்கலாம்.

WordPress Page VS Post

பொதுவாக ஒரு வலைதளத்தை வடிவமைக்கும் பொழுது 5 பக்கம் அல்லது 10 பக்கம் உள்ள வலைளத்தை உருவாக்கலாம் என்று சொல்வார்கள். இதெல்லாம் HTML, CSS, PHP போன்ற கோடிங்கில் உருவாக்கும் வலைதளத்திற்கு பொருந்தும். ஆனால் CMS வகையிலான தளங்கள் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. அது Post & Page. இதில் Page என்பது மிக முக்கியமான பகுதிகளை காட்ட பயன்படுகிறது. Post பகுதி அன்றாடம் நாம் கவனிக்கும் செய்திகளை வெளியிட பயன்படுகிறது எனலாம். ஒரு News Website உருவாக்கினால் அதில் முகப்பு பக்கம் என்பது ஒரு Page என்றால் அதில் தெரியும் உள்ளடக்கம் பல்வேறு உட்தலைப்புகளில் இருக்கும். எடுத்துக்காட்டாக உலகம், மாநிலம், செய்திகள் என பலவாறு Category செய்யப்பட்டு இருக்கும். ஒவ்வொன்று ஒரு செய்தியை தாங்கி நிற்கும். இது புதிதாக வந்த ஒன்று பழைய செய்தியை கடந்து காட்டும். ஆனால் முகப்பு பக்கம் என்பது எப்பொழுதும் நிலையானதாக இருக்கும். வேறு ஒரு உதாரணம் சொல்லப்போனால் நம்மை பற்றிய About Page, நம்மைத் தெ்ாடர்பு கொள்ள உருவாக்கும் Contact Us Page ஆகியவை நிலையான தன்மையில் இருக்கும்.

How to create a page in WordPressHow to create a post in WordPress ஆகிய இரண்டு பதிவுகளும் மேலதிக தகவல்களை உங்களுக்கு தரும். மேலும் பல்வேறு தலைப்புகளில் நாம்  உருவாக்கியுள்ள WordPress Tutorials in Tamil பகுதியில் உள்ள கட்டுரைகளை கீழே படிக்கலாம்

%d bloggers like this: